பிப்ரவரி 2020 - கொரிய அரசின் கொரோனா தொற்று பற்றிய தகவல்கள்

வருமுன் காப்போம் என்ற குறிக்கோளின் அடிப்படையில் கொரிய அரசாங்கம் காரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளை மிகவும் சிரத்தையுடன் மேற்கொண்டிருக்கிறது. கல்வி நிறுவனங்கள், தொடர்வண்டி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் கொரிய அரசாங்கம் மெர்ஸ் போன்ற பரவும் வியாதிகளை ஆரம்பத்திலேயே (சுமார் ஒரு மாதத்திற்குள்) கட்டுப்படுத்தி துரத்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் இருந்து காரோனா வைரஸ் பாதிப்புடன் வந்த இருவரை மருத்துவமனைகள் முழுவதும் வெற்றிகரமாக நோயை குணப்படுத்தி காப்பாற்றி இருக்கும் சாதனை குறிப்பிடத்தக்கது. கல்லூரிகள் திறப்பது சற்று தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. எனவே இங்கு கல்வி கற்க இந்த பருவத்திற்கு (மார்ச் 2020) வர விரும்பும் மாணவர்கள் தயவுசெய்து குறிப்பிட்ட நிர்வாகங்களை தொடர்புகொண்டு பயணத் தேதியை சரி பார்த்துக்கொள்ளவும். அவசர தேவைக்கு இந்த முகநூல் கணக்கின் காலக்கோடு (timeline) அல்லது மெசஞ்சர் (messenger) மூலமோ தகவல் அனுப்பவும். தகவல் பரிமாற்ற குறைபாட்டால் சற்று முன்பாகவே வந்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சங்கம் உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த அடிப்படையிலேயே முக்கியத்துவம் கருதி இந்த தகவல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மிக்க நன்றி!

ஒட்டுமொத்த (தென்) கொரிய அளவில் காரோனா தொற்றுடையோர் ஆங்கங்கே கண்டறியப்படுவதும் அரசு தொற்றுடையோரை மருத்துவ தனிமைக்கு உடபடுத்தி சிகிச்சையளிப்பதும், மக்களை தீவிர விழிப்புடன் இருக்க வைத்து தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் வெற்றிகரமாக தொடர்கிறது. கொரியாவின் நோய்பரவல் தடுப்பு நுண்ணறிவுத்துறை Epidemic Intelligence Services of Korea களத்தில் தீவிரமாக செயலாற்றுகிறது. தொலைபேசி வழி மருத்துவ பரிந்துரை (Medical Prescription via phone) அரசால் அனுமதிக்கப்ட்டுள்ளது. இங்கு வாழும் "தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஆரம்பம் முதல் விழிப்புடன் இருந்து வருமுன் காப்போம் என்ற முந்தைய நிலையே தொடர்கிறது".சங்கம் கொரியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களுடன் தொடர்பில் உள்ளது. அவ்வப்போது விழிப்புணர்வு செய்திகள் பரிமாறப்படுகிறது போன்ற விடயங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து நிலவேம்பு போன்ற காய்ச்சல் தற்காப்பு பொருட்கள் வரவழைப்பது போன்ற வேலைகளையும் சங்கம் செய்கிறது. தொற்று 100-150 என்ற அளவில் கண்டறியப்பட்ட பகுதியான தேகுவில் வாழும் நமது மக்களை சங்கத்தின் அறிவுரைக்குழு உறுப்பினர் முனைவர் அச்சுதன் அவர்களும் சங்கத்தின் செயலர் இராமன் அவர்களும் விழிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஊடக தோழமைகளின் கனிவான கவனத்திற்கு!
தென்(கொரியாவில்) கொரோனா வைரஸ் தொற்று பற்றிய உண்மை தகவலை அறிந்துகொள்ள கொரிய நோய் தடுப்புத்துறையின் பின்வரும்
https://www.cdc.go.kr/board/board.es வலைத்தளத்தைக் காணவும்,
மேலும் தகவலுக்கு இத்தொற்று அதிகம் பாதித்த தேகு பகுதில் வசிக்கும் கொரியா தமிழ்ச் சங்கத்தின் செயலர் முனைவர் இராமன் (+82-102738-5152) அவர்களை அணுகவும்!. 

Update as per reports on 23 Feb 2020, 4 pm KST: நேற்றிலிருந்து நோய்த்தொற்றுடையோர் எண்னிக்கை நாளொன்றுக்கு 160 என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும்படி நாட்டின் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்திருக்கும் அறிவுரைக்கமைய (http://www.koreaherald.com/view.php?ud=20200223000201) அரசு அதிகபட்ச சுகாதர எச்சரிக்கையை (https://www.koreatimes.co.kr/www2/index.asp) விடுத்திருக்கிறது.

கடந்த புதன் 35, வியாழன் 87, வெள்ளி 204, சனி 413, என்றிருந்த தொற்றுடையோர் எண்ணிக்கை இன்று ஞாயிறு தற்போதைய நிலவரப்படி 602 என்ற அளவை எட்டியிருக்கிறது. இதில் பெரும்பகுதி (495 பேர்) (Ref: https://www.cdc.go.kr/board/board.es…) தென்பகுதி நகரான தேகு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அடையாளம் காணப்பட்டவர்கள். எனவே இந்த பகுதியை கொரிய அரசு சிறப்பு சுகாதார மண்டலமாக அறிவித்து மருத்துவ பணியை முடுக்கி விட்டுள்ளது.

தேகு பகுதில் உள்ள உள்ள தமிழ் மக்களை பொருத்தவரையில் "வருமுன் காப்போம் என்ற ஆரம்ப நிலையே தொடர்வது” சற்று ஆறுதலளிக்கக்கூடியது.
மற்ற பகுதிகளில் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 10-க்கு உள்ளாகவே அதிகரித்து வருகிறது.

நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்புடைய ஒவ்வொரு இடமும் (வணிக வளாகங்கள், மருத்துவமனைகளின் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் நிறுவனங்கள்) என வேறுபாடின்றி மூடப்பட்டு கிருமிநீக்க வேலைகள் நடைபெறுகிறது. அவ்விடங்கள் மறுசுகாதார மதிப்பீட்டிற்காக காத்திருக்கின்றன.

மற்ற பகுதிகளில் தொற்றின் வேகம் அதிகரிக்கும் வேகத்தை மட்டுப்படுத்த அரசு தொலைபேசி வழி எச்சரிக்கை செய்திகள், வருமுன் காக்கும் வழிமுறிகளை மக்களை கடைபிடிக்குமாறு தீவிரமாக வேண்டுதல், பள்ளி, கல்லூரிகளின் திறப்பை தள்ளிப்போடுதல் போன்ற பணிகளை முடுக்கி விட்டுள்ளது. 

#Advisory_for_Indians_in_ROK__From_Embassy_on_COVID_19
COVID-19 Advisory for Indian Nationals in ROK
Embassy has been receiving phone calls and e-mails from several Indian nationals regarding the increase in the number of cases of the COVID-19 virus in Korea over the past few days. ROK Government has today raised the virus alert level to "red". However, ROK Govt has also reported that these cases are largely centered in Daegu and the neighboring north Gyeongsang province. In this situation, Indian nationals in ROK are advised to take the following precautions so as to protect themselves from the virus:
1. Wash your hands frequently and thoroughly with soap and water or an alcohol-based hand sanitizer.
2. Avoid touching your eyes, nose, or mouth with unwashed hands, especially when outdoors.
3. Wear masks while using public transport and moving around outside. Cough or sneeze into your sleeves, if you are not wearing a mask.
4. Disinfect surfaces like door handles, elevator buttons etc frequently.
5. Avoid public gatherings as much as possible.
6. Refrain from contact with sick people.
7. Avoid physical contact with strangers. The Indian ‘namastey’ greeting is best.
8. In case of symptoms such as fever and respiratory problems (coughing, sore throat, breathing difficulties, etc.)
within 14 days after arriving in Korea, please call the KCDC Call Center at +82-2-1339.
Korean Government has declared Daegu and Cheongdo county in Gyeongbuk as "Special Care zones". In this situation, please reconsider non-essential travel to these places.
Please note the contact details of the Korea Centers for Disease Control & Prevention (KCDC) for additional information.
Inquiries
- KCDC Hotline: +82-2-1339
* Services available 24/7
- 1330 Korea Travel Hotline: +82-2-1330 (Korean, English, Japanese, Chinese, Russian, Vietnamese, Thai, Malay)
- Seoul Dasan Call Center: +82-2-120 → 9 (Korean, English, Japanese, Chinese, Vietnamese, Mongolian)
- Ministry of Justice, foreigner assistance hotline: +82-2-1345 (Korean, English, Japanese, Chinese, Vietnamese, and 15 other languages)
* It is recommended to contact 1339 first. Numbers other than 1339 can provide basic assistance on finding designated clinics for coronavirus disease and disease prevention.
Website: www.cdc.go.kr (Korean, English)
Please visit the Indian Embassy website and social media pages for regular updates on the COVID-19 virus.
-6 PM KST February 23,2020 

வெளியில் செல்லும்பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணியவும்!
பொதுவெளியில் பொருட்களை தொடுவதை தவிர்க்கவும், முகத்தை கையால் தொடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்
வாய்ப்பிருந்தால்70% மேல் தண்ணிரில் கலந்துள்ள எத்தில் ஆல்ககால் கிருமிக்கொல்லியை கையில் சிறிதளவு வைத்துக்கொண்டு அவ்வப்போது கைகளில் தேய்த்து கொள்ளவும்.
வீட்டுக்கு வந்தவுடன் கண்டிப்பாக30 வினாடிகள் கைகளை சோப்பால் நன்றாக கழுவவும்.
குளிருக்கு பயன்படுத்தும் வெளிப்புற அங்கியின்-மேல் கிருமிக்கொல்லியை தெளிக்கவும். வாய்ப்பிருந்தால் மாற்று அங்கியை வைத்துக்கொண்டு அடிக்கடி சலவை செய்யவும்.
ஆங்கில மூலம்https://www.cdc.gov/coronavirus/2019-ncov/prevent-getting-sick/prevention.html 
தமிழில்: கொரிய தமிழ்ச் சங்கம்.

(தென்)கொரியாவில் கோவிட்-19 தொற்று கட்டுப்படுத்துவத்தின் நிலை பற்றிய தகவல்கள் Korea Centers for Disease Control (KCDC) http://www.cdc.go.kr/cdc_eng/ - ன் - ஊடக வெளியீடுகள், இங்குள்ள நடுநிரோட்ட ஊடக செய்திக்குறிப்புகள், அறிக்கைகள், எமது கொரிய தோழர்களின் பார்வை மற்றும் எண்ணப்பாடு நேற்று இத்தொற்று அதிகம் பாதித்த தேகு பகுதில் உள்ள சங்க ஆளுமைகளான அறிவுரைக்குழு உறுப்பினர் முனைவர் அச்சுதன், செயலர் முனைவர் இராமன், மற்றும் பொருண்மிய செயலர்-நிகழ்ச்சிகள்- முனைவர் அந்துவன் ராஜேஷ் உள்ளிட்டோருடன் நடைபெற்ற இனையவழி கலந்துரையாடல் ஆகியவற்றை ஆய்வு செய்து விரைவில் வெளியிடப்படும்.

<< Urgent Notice: Automatic Extension of Period of Stay for Registered Foreigners >>
In order to prevent and minimize the spread of infection by COVID-19, Immigration Offices decide to extend the period of stay for registered foreigners until April 30, 2020 AUTOMATICALLY.
In this regards, please refrain from visiting your designated immigration offices until COVID-19 crisis is stabilized.
If you want to extend your stay or report other immigration related affairs, please kindly visit to Hi Korea website or contact to 1345 Immigration Contact Center for further information.
**However, E-9 visa, E-10 visa holders are EXCLUDED in the automatic extension.
**You may check whether your visa has been extended or not on www.hikorea.go.kr and click ‘Check the authorized period of stay’ button and fill some information on that.
In summary, except for E-9 visa and E-10 visa holders, if registered foreigners's eligible expiration date is before April 29, 2020, it shall be automatically extended to April 30, 2020.
Sourced by Hi Korea website.

코로나19 지역사회 감염 확산 우려에 따라, 출입국•외국인관서 방문 최소화를 통한 감염 확산을 방지하고자, 등록(거소신고) 외국인의 체류기간을 다음과 같이 4. 30.까지 일괄 연장하기로 하였습니다.
민원인께서는 이를 참고하여 코로나19 사태가 안정화될 때까지 관할 출입국•외국인관서 방문을 가급적 자제 해 주시고, 체류기간연장이나 기타 신고민원은 온라인민원(www.hikorea.go.kr)을 적극 이용해 주시기 바랍니다.
이번 자동 연장된 체류기간은 하이코리아(자주찾는서비스-'체류기간 확인')에서 본인의 여권번호, 국적, 생년월일로 확인하실 수 있으며, 외국인종합안내센터(☎1345)에 문의하시면 자세한 안내를 받으실 수 있습니다.
#expats #foreigners #covid19

https://www.facebook.com/visainkorea/photos/pcb.2567369213536342/2567385490201381/?type=3&theater
 

Update as per reports on 24 Feb 2020, 4 pm KST
முதலில் இரவு -பகல் பாராமல் உழைத்து தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பாடுபடும் கொரிய அரசின் நோய் தடுப்பு மற்றும் மருத்துவ பணியாளர்களை பாராட்டுவோம்!

நேற்று கொரியா நேரம் பிற்பகல் 4 மணி நிலவரப்படி 604 என்றிருந்த நிலை நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 804 -வும் இறப்பு 5 லிருந்து 7 ஆகவும் உயர்ந்துள்ளது. (https://www.cdc.go.kr/board/board.es…)

இந்த எண்ணிக்கையில் (தொற்று மற்றும் இறப்பு) 76% பேர் நோய்த்தொற்று அதிகம் பாதித்த தேகு உள்ளிட்ட வடக்கு கெங்சான் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். இந்த பகுதியைப் பொறுத்தவரை தொற்றுஏற்பட்டுருக்க வாய்ப்புள்ளோரை தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றுள்ளோருக்கு சிகிச்சையளித்து இறப்பை குறைத்தல் என்ற வழிமுறையை அரசு கையாள்கிறது

 தொற்று கூடும் வேகம் நேற்று முந்தைய நாளைவிட 20% அதிகரித்துள்ளது.

தலைநகர் சியோல், மற்றும் தொடர்புடைய பெரிய மாகாணமான கொங்கிதொ போன்ற இடங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 என்ற அளவிலிலேயே உள்ளது கவனிக்கத்தக்கது. மற்ற இடங்களில் இருபதிற்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.

தேகு தவிர்த்த மற்ற பகுதிகளில் நோய்த்தொற்று பரவுதல் பற்றிய நுண்ணறிவு வேலைகள்.தொற்று பாதித்த மற்றும் வாய்ப்பிருக்கும் இடங்களை கிருமிநீக்க வேலைகள் செய்தல், மக்களை தற்பாதுகாப்பு வழிகளை கடிப்பிடக்க கோருதல் போன்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது

இங்கு வாழும் தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்தியரை பொறுத்தவரை வருமுன் காப்போம் என்ற நிலையே தொடர்வது சற்று ஆறுதலளிக்கக்கூடியது.

கொரிய மக்கள் இயல்பாக காணப்பட்டாலும் கூடிய எண்ணிக்கை அனைவரும் கவலையடைய செய்திருக்கிறது என்றால் அது மிகையாகது. 

Update as per reports on 25 Feb 2020, 4 pm KST
நேற்று கொரியா நேரம் பிற்பகல் 4 மணி நிலவரப்படி 804 என்றிருந்த நிலை நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று 945 இறப்பு 7 லிருந்து 10 ஆகவும் உயர்ந்துள்ளது. (https://www.cdc.go.kr/board/board.es…)

தொழில், அன்றாட போக்குவரத்து, சந்தைகள் என அனைத்தும் இயல்பாகவே காணப்படுகிறது. எங்கும் மக்கள் முககாசத்துடன் காணப்படுகிறார்கள்.

தொற்றுடையோர் எண்ணிக்கையில் 791 பேர் தேகு உள்ளிட்ட வடக்கு கெங்சான் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர். இந்த பகுதியில் மருத்துவ தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்காக இடவசதி மற்றும் மருத்துவ பணியாளர் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு உயர்த்தியுள்ளது.

மேலும் மருத்துவமனைகள் மற்றும் சமூக சுகாதார நிலையங்கள் ஆகியவை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட்டு வருகிறார்கள்.

தொற்று கூடும் வேகம் முந்தைய நாளைவிட 29.50% குறைவாக காணப்படுகிறது.

தலைநகர் சியோல் உள்ளிட்ட கொரியாவின் மற்ற பகுதிகளில் 1-5 என குறைவான எண்ணிகையில் அங்கங்கே அடையாளம் காணப்பட்டு அவர்களுடன் 1 மீட்டர் இடைவெளியில் காணப்பட்டோர் உடனடியாக அடையாளம் காணப்பட்டு மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இங்கு வாழும் தமிழ் மக்கள் உள்ளிட்ட இந்தியரை பொறுத்தவரை வருமுன் காப்போம் என்ற ஆரம்ப நிலை தொடர்வது சற்று ஆறுதலியக்கக்கூடியது.

அரசு தொலைபேசி வழி தகவல்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புகள் மூலமும் வருமுன் காக்கும் வழிமுறைகளை எடுத்துக்கூறுதல், தொற்று பாதித்த இடங்கள், எங்கு காணப்பட்டுள்ளது, குறிப்பிட்ட இடத்துக்கு சென்றவர்ககளை மருத்துவ கண்கானிப்பிற்கு அழைத்தல் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. 

Update as per reports on 26 Feb 2020, 4 pm KST
முந்தைய நாட்களை ஒப்பிடுகையில் தொற்றுடையோர் எண்ணிக்கை சற்று அதிகமாக கூடியுள்ளது . புதிதாக 280 பேர் பேர் தொற்றுடையோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முந்தைய நாள் 945 என்றிருந்த தொற்றுடையோர் எண்ணிக்கை 1225 எனவும் இறப்பு 10 லிருந்து 12 எனவும் உயர்ந்துள்ளது. இறந்தவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட வயதானர்களாவே அறியப்படுகின்றனர். (https://www.cdc.go.kr/board/board.es…)

காலை நிலவரப்படி, இதில் 85% பேர் தோற்று அதிகம் பாதித்த தேகு உள்ளிட வடக்கு கெங்சன் மாகாணத்தை சேர்ந்தவர்கள். மேலும் 62% குறிப்பிட்ட வழிபாட்டிடம் மற்றும் மருத்துவமனையை சேர்ந்தவர்களாவர். சியோல் மற்றும் பூசான் உள்ளியிட் பகுதிகளில் தொற்றுடையோர் எண்ணிக்கை 50 என்ற அளவை எட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி தொற்றை அடையாளம் காண்பதற்கான வரிசை சுமார் 53000 பேர் என இருக்கிறது, 32000 பேர் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரிடம் சோதனை நடைபெறுகிறது.

இந்த எண்ணிக்கைகளில் சீனாவிலிருந்து கூட்டிவரப்பட்ட கொரியா மக்களின் முன்றாவது அணியும், இசுரேல் பயணித்த 31 பெரும் அடக்கம்.

பெரும்பாலான தொற்றாளர்கள் மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டிடங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் தொடர்புடையோர் என புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

மிகவும் நெருக்கமான நடமாட்டத்தை தவிர்ப்பதும் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதும் நல்லது. அதிக காற்று இடைவெளி யுடன் கூடிய நடமாட்டம் இருப்பது நல்லதென காட்டுகிறது.

இங்குள்ள இந்தியர் யாரும் இதுவரை பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை.

கொரியா மக்களிடையே எச்சரிக்கையுடனும் சற்று கவலையுடனும் கூடிய இயல்புநிலை காணப்பட்டாலும், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் நடுவில் வெளிமண்ணில் இத்தகைய சூழலில் ஏற்படும் இயல்பான பதட்டம் அதிகரித்திருக்கிறது. பலர் விடுமுறை எடுத்தும், விடுமுறையை முன்கூட்டி திட்டமிட்டும் சொந்த ஊருக்கு அதிகம் பயணிப்பதை காண முடிகிறது.

இத்தகைய சூழலில் இந்திய தூதரகம் நமது மக்களுக்கு சூழலை எடுத்துரைப்பதற்கும் இங்குள்ள நமது மக்களின் நலன் தொடர்பில் அரசின் கரிசனைகளை தெரிவிப்பதற்கும், நமது சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட இந்திய சமூக தலைமைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று காலை தொற்றுடையோர் எண்ணிக்கை 2000 என்ற அளவை எட்டியுள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

26 Feb 2020, 4 pm KST நிலவரப்படி, முந்தைய நாள் 1225 என்றிருந்த தொற்றுடையோர் எண்ணிக்கை 1727 எனவும் இறப்பு 12 லிருந்து 13 எனவும் உயர்ந்துள்ளது. (https://www.cdc.go.kr/board/board.es?mid=a30402000000&bid=0030)

சியோல், கியோங்கி மாகாணம், பூசான், தெற்கு கெங்சான் மாகாணம் முறையே மொத்த தொற்றுடையோர் எண்ணிக்கை 56, 62, 61 மற்றும் 43 என்பதாக உள்ளது.

புதிதாக தோற்று காணப்பட்டுள்ள 502 பேரில் 477 பேர் அதிகம் பாதித்த தேகு உள்ளிட வடக்கு கெங்சன் மாகாணத்தை சேர்ந்தவர்கள்

தொற்று அதிகம் பாதித்த குழுக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தேகு-புதிய உலகம் வழிபாட்டிட உறுப்பினர்கள் மற்றும் சொங்தோ தெனம் மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் தொடர்பான இடங்களில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி நோய் தொற்றை தடுக்க சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளும் நோய்த்தொற்று நுண்ணறிவு மற்றும் மருத்துவ தனிமைப்படுத்துதல் ஆகிய பணிகளை துவங்கியுள்ளது. இதனை விரைவுபடுத்தும் தொழில்நுட்பங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடுவண் அரசின் நோய் தடுப்புத்துறை வழங்கி வருகிறது.

பன்னாட்டு கூட்டு இராணுவ பயிற்சி முதல் வழிபாட்டு கூடுதல் வரை பெரும்பாலான கூட்டு நிகழ்வுகள் கைவிடப்பட்டுள்ளது அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறைவான எண்ணிக்கையில் (200/1200) சீன மாணவர்கள் இங்கு இந்த பருவத்திற்கு வருகை தரும் அதேவேளையில் கொரியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மற்ற வெளிநாட்டு மாணவர்கள் ஊர் திரும்புவது அதிகமாகியுள்ளது.

இங்குள்ள வங்கிகள் பாதிக்கப்பட்ட தொழித்துறையினருக்கு உதவ முனைவந்துள்ளனர்.

தொற்றை கட்டுப்படுத்தும் பணிக்கு தனியார் மருத்துவ நிபுணர்களும் தன்னார்வலர்களாக இணைந்து வருகின்றனர். வேகமான மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு வழிமுறைகள் செயல்படுத்தப்படுகிறது. 

Video Version காணொளி வடிவம்
.
https://www.youtube.com/watch?v=kbm1eVo6l6c

பிபிசி தமிழோசையின் இன்றைய உலக செய்தியறிக்கையில் தென்கொரியாவில் காரோண தொற்று பரவல் குறித்து கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயலர் பேராசிரியர் இராமன் அவர்கள் வழங்கிய நேர்காணலில் காணொளி வடிவம் 

Update based morning news of 29 Feb and reports of KCDC on 28 Feb 29, 9 am and 4 pm KST

Feb 29 2020 10 am-படி தொற்றுடையோர் மற்றும் இறப்பு எண்ணிக்கை முறையே 2931 மற்றும் 16.

28 Feb 2020, 4 pm KST-படி, தொற்றுடையோர் எண்ணிக்கை 2297 (முந்தைய நாளைவிட உயர்வு = 570). (http://www.cdc.go.kr/board.es?mid=a30402000000&bid=0030)

தொற்று நீக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து 30-இற்கு கீழேயிருப்பது கவனிக்கத்தக்கது. கொரிய நோய் தடுப்புத்துறை வைரஸ் குறித்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்து இந்த தொற்றை குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் மருந்துகளை கண்டறியும் பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறது

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தேகு-வடக்கு கெங்சான் மாகாணம் தொடர்ந்து 85% என்ற அளவில் இருந்துவருவது அங்கு ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பான சூழலில் பாணியாற்றும் இந்தியர்களை பதட்டமடைய செய்துள்ளது.

நோய்த்தொற்று குறித்த கொரிய சட்டத்தின்படி தொற்று பாதித்த தொழிலாளர்க்ளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உண்டு என சட்ட சட்டவளார்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் (https://lawyerhwang.com/on-shutdown-allowances-and-paid-le…/)
அதிகரித்துவரும் தொற்றால் மக்களின் அன்றாட நடமாட்டம் நாசி மறைப்புகளுடன் (Face Masks) தொடங்குகிறது (http://www.koreatimes.co.kr/www/news/dr/653_285254.html). நாசி மறைப்புகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டு விலை 4 மடங்கு உயர்ந்திருப்பதாகவும், நாசி மறைப்புகளை வெளிநாட்டிற்கு கிடைத்த முயன்றதன்பேரில் சுமார் 143 பேரை கொரிய நுகர்வோர் பணியகம் விசாரித்துவருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. (http://www.koreatimes.co.kr/www/tech/2020/02/693_285281.html)

எளிய பொதுமக்கள் முதல் இராணுவ வீரர்கள் (தொற்று காணப்பட்ட கொரிய படையினர் 26, அமெரிக்க படையினர் தொடர்பில் 3) சமுகத்தை அணைத்து அங்கத்தினர்களும் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சொனான் நகரில் தொற்று காணப்பட்ட 16 பேரில் பெரும்பாலானோர் ஒரே உடற்பயிற்சியகத்தினர் - போன்ற செய்திகள் மக்கள் இடைவெளியுடன் கூடும் செயற்பாடுகளையும் தளர்வடைய செய்திருக்கிறது.

கொரிய வானூர்தி சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் சேவையின் அளவை (இருக்கைகள் மற்றும் வழித்தடம்) குறறைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

இந்தியா உள்ளிட்ட 52 நாடுகள் கொரிய சுற்றுலா பயணிகளின் வருகையை தடை செய்துள்ளனர் என்பது நோய்த்தொற்று பரவுதல் குறித்த சர்வதேச கவலையை எடுத்துக்காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.

Feb 29 2020 10 am-படி தொற்றுடையோர் மற்றும் இறப்பு எண்ணிக்கை முறையே 2931 மற்றும் 16.

28 Feb 2020, 4 pm KST-படி, தொற்றுடையோர் எண்ணிக்கை 2297 (முந்தைய நாளைவிட உயர்வு = 570). (http://www.cdc.go.kr/board.es?mid=a30402000000&bid=0030)

தொற்று நீக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து 30-இற்கு கீழேயிருப்பது கவனிக்கத்தக்கது. கொரிய நோய் தடுப்புத்துறை வைரஸ் குறித்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்து இந்த தொற்றை குணப்படுத்தும் மற்றும் தடுக்கும் மருந்துகளை கண்டறியும் பணிகளை விரைவுபடுத்தியிருக்கிறது

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தேகு-வடக்கு கெங்சான் மாகாணம் தொடர்ந்து 85% என்ற அளவில் இருந்துவருவது அங்கு ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பான சூழலில் பாணியாற்றும் இந்தியர்களை பதட்டமடைய செய்துள்ளது.

நோய்த்தொற்று குறித்த கொரிய சட்டத்தின்படி தொற்று பாதித்த தொழிலாளர்க்ளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உண்டு என சட்ட சட்டவளார்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் (https://lawyerhwang.com/on-shutdown-allowances-and-paid-le…/)
அதிகரித்துவரும் தொற்றால் மக்களின் அன்றாட நடமாட்டம் நாசி மறைப்புகளுடன் (Face Masks) தொடங்குகிறது (http://www.koreatimes.co.kr/www/news/dr/653_285254.html). நாசி மறைப்புகளுக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டு விலை 4 மடங்கு உயர்ந்திருப்பதாகவும், நாசி மறைப்புகளை வெளிநாட்டிற்கு கிடைத்த முயன்றதன்பேரில் சுமார் 143 பேரை கொரிய நுகர்வோர் பணியகம் விசாரித்துவருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. (http://www.koreatimes.co.kr/www/tech/2020/02/693_285281.html)

எளிய பொதுமக்கள் முதல் இராணுவ வீரர்கள் (தொற்று காணப்பட்ட கொரிய படையினர் 26, அமெரிக்க படையினர் தொடர்பில் 3) சமுகத்தை அணைத்து அங்கத்தினர்களும் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சொனான் நகரில் தொற்று காணப்பட்ட 16 பேரில் பெரும்பாலானோர் ஒரே உடற்பயிற்சியகத்தினர் - போன்ற செய்திகள் மக்கள் இடைவெளியுடன் கூடும் செயற்பாடுகளையும் தளர்வடைய செய்திருக்கிறது.

கொரிய வானூர்தி சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் சேவையின் அளவை (இருக்கைகள் மற்றும் வழித்தடம்) குறறைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

இந்தியா உள்ளிட்ட 52 நாடுகள் கொரிய சுற்றுலா பயணிகளின் வருகையை தடை செய்துள்ளனர் என்பது நோய்த்தொற்று பரவுதல் குறித்த சர்வதேச கவலையை எடுத்துக்காட்டுகிறது என்றால் அது மிகையாகாது. 

Korea Tamil Sangam
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy